சரீரத்தில் உண்டான வேதனை ஒருநாள் மறக்கப்பட்டு போகலாம்....
கடினமான வார்த்தைகளால் ஏற்பட்ட புண் நீண்டகாலம் தாக்கத்தை ஏற்படுத்தும்....
என்னை சுற்றியுள்ள அனேக மக்கள் ஒரு உற்சாகமூட்டும் வார்த்தையைக் கேட்க காத்திருக்கிறார்கள்....
அந்த ஒரு வார்த்தை யாரோ ஒருவருடைய வாழ்க்கையை மனமகிழ்ச்சி ஆக்கும் என்பதை அறிவாயா?
கோபமான வார்த்தைகள் நண்மையானதை செய்யாது.....
சிறு புன்னகையோடு சொல்லப்பட்ட இரக்கமுள்ள வார்த்தை அனேக காரியங்களை செய்யும்....
நீதிமொழிகள் 15:4
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்
உன் நாவு பிறரை கட்ட உபயோகப்படட்டும்! அது காயம் கட்டுகிறதாக இருக்கட்டும்!! இன்று ஏன் ஒரு இரக்கமுள்ள வார்த்தையால் நீங்கள் யாராவது ஒருவரை உற்சாகப்படுத்தக்கூடாது???
Comments