சிங்கங்கள் பட்டினியாய் கிடந்தன....
சாப்பிடும்படி தேவனிடமிருந்து அவைகளுக்கு கட்டளை வரவில்லை.....
கெபியிலே தேவனுக்கு பயந்தவன் பாதுகாப்பாக இருந்தான்....
உன் பாதுகாப்பை நிர்ணயிப்பது உன்னுடைய சூழ்நிலை அல்ல......
நீ யார் மீது விசுவாசம் வைத்து இருக்கிறாயோ அவரே உன் பாதுகாப்பை நிர்ணயிப்பவர்....
நீ தேவனுக்கு பயந்து வாழும் வரை எதுவும் உன்னை பயமுறுத்த முடியாது......
நீ தேவனுக்கு பயந்து வாழும் வரை ஒரு தீங்கும் உன்னை அணுகாது....
சங்கீதம் 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது
தேவனுக்கு பயந்தவனை ஒன்றும் பயப்படுத்த முடியாது! அவன் வேண்டுமானால் தன் சத்துருக்களுக்கு பயமுறுத்தலாக இருக்கலாம்!! ஆம் ஒரு நன்மையும் உனக்கு குறைவுபடாது!!!
Comments