என் எதிர்காலம் என் சுய பலத்தை சார்ந்ததல்ல....
என் எதிர்காலம் என்னுடைய தற்போதைய சூழ்நிலையை சார்ந்தது அல்ல....
என் எதிர்காலம் நான் யார் என்பதைப் பொறுத்தது அல்ல....
என் எதிர்காலம் நான் எதை பார்க்கிறேன் என்பதை சார்ந்தது அல்ல....
ஆம் இப்பொழுது நான் இருளின் பள்ளத்தாக்கிலே இருக்கலாம்....
ஆனால் என்னோடு நடப்பது யார் என்பதுதான் முக்கியம்!
அவர் என்னையும் நான் எங்கே செல்கிறேன் என்பதையும் அறிந்து இருக்கிறார்....
நான் பயப்பட மாட்டேன்! நான் நம்பிக்கையற்ற நபர் இல்லை!
முடிவில்லா நம்பிக்கைக்கு வழிநடத்திச் செல்லும் ஒருவர் என்னோடு இருக்கிறார்!
சங்கீதம் 23:4
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்
எனக்கு நம்பிக்கை உண்டு! இருளின் பள்ளத்தாக்கில் தேவன் என்னோடு கூட நடக்கிறார்!! என்னால் பார்க்க முடியாவிட்டாலும் என்னை காண்கிற தேவன் என்னோடு உண்டு - நான் எப்படி பயப்படுவேன்???
Comments