நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவன் நமக்கு பிரதானமான ஒரு பொறுப்பினை கொடுத்திருக்கிறார். ஜெபிக்க இருக்கும் சவாலையும் வேதம் வாசிக்க இருக்கின்ற சவாலையும் நம்மால் ஓரளவிற்கு கையாள
முடிகின்றது. ஆனால் இந்த பிரதான கட்டளையை நிறைவேற்றுவதில் நம் எல்லோருக்கும் போராட்டம் உண்டு.
மத்தேயு 18:19, 20
தேவன் தம்முடைய பிரதான கட்டளையை எழுதி இருக்கிறார். நாம் ஆத்தும ஆதாயம் செய்வதே தேவனுடைய பிரதானமான விருப்பமாக இருக்கிறது.
அழிந்து போகிற ஒவ்வொரு ஆத்மாவும் தேவனுடைய கண்களில் விலையேறப் பெற்றது.
ஆத்துமாக்களை ஆதாயம் பண்ண ஒரு சவால். காணாமல் போனதை தேட ஒரு சவால்.
ஆம் யாரோ ஒருவருடைய அல்லது சிலருடைய ஜெபத்தினாலும் முயற்சியினாலும் இன்றைக்கு நாம் இரட்சிக்கப்பட்டு தேவ கிருபையினால் இந்த சிலாக்கியத்தை பெற்றிருக்கிறோம். நாம் பிறரை கிறிஸ்துவுக்குள் நடத்த வேண்டாமா?
40 நாட்கள் 4 ஆத்துமாக்களை வழிநடத்த இந்த சவாலை ஏற்றுக் கொள்வோம். வேதத்தை தியானித்து ஜனங்களுக்கு ஜெபித்து அழிவுக்கு நேராக செல்கிறவர்களை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம். இந்த சவாலை ஏற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமா??
இந்த சவாலை ஏற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு தினமும் கொடுக்கப்படும் காரியங்கள்
1. ஆத்துமா ஆதாயத்தை பற்றி ஒரு சின்ன தேவ செய்தி
2. சுவிசேஷம் சொல்வதற்கு உதவி செய்யக்கூடிய ஒரு மன்ன வசனம்
3. தினமும் ஜெபிப்பதற்கு ஜெப குறிப்புகள்
4. நீங்கள் ஜெபிக்கின்ற அந்த 4 பேருக்கும் தினமும் அனுப்ப சுவிசேஷம் சம்பந்தமான எஸ்எம்எஸ் அல்லது வீடியோ
இதில் கலந்துகொள்ள உங்கள் பெயரை பதிவு செய்யவும்
Comments