top of page

சுவிசேஷ ஊழியம் செய்வதற்கு தடை - எனக்கு ஒன்றும் தெரியாது



நம் சுவிசேஷ ஊழியம் செய்வதற்கு அடுத்த தடை எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்வது


சுவிசேஷ ஊழியம் செய்ய வேண்டும் என்று நமக்கு ஆசை உண்டு. ஆண்டவரை முழுமனதோடு நேசிக்கிறோம். அவருக்காக ஊழியம் செய்ய வேண்டும் என்ற வாஞ்சையை நமக்கு உண்டு. ஆனால் நம்மை தடைசெய்வது எது தெரியுமா? எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நமக்குள்ளே புலம்பிக் கொள்ளுகிறோம்.


நாம் அறியாதவர்கள் தான். ஆனால் நம்மை பலப்படுத்தி நமக்கு ஞானத்தை தருபவர் பரிசுத்த ஆவியானவர். நாம் அவரை சார்ந்து கொள்ளும்போது உன்னத பலனால் நிரப்பப்படுவோம்.


அப்போஸ்தலர் 1:8


பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்


ஆம் நம் ஆவியானவரால் நிரப்பப்படும் போது பயங்கள் எல்லாம் நம்மை விட்டு நீங்கும். நம்முடைய பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல தேவனுடைய ஆவியினாலே இந்த ஊழியத்தை செய்வோம். ஜெயம் எடுப்போம்!

 

மனப்பாட வசனம்


யோவான் 10:28.

நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.


 

ஜெபக்குறிப்புகள்


1. மாம்ச பெலத்தினால் முயற்சி செய்வதை நிறுத்த


2. ஒவ்வொரு முயற்சியிலும் ஆவியானவரை வரவேற்க


3. பரிசுத்த ஆவியின் பலத்தைப் பெற்றுக்கொள்ள


4. ஆவியானவருடைய ஞானத்தை சார்ந்து கொள்ள


5. ஞானத்தில் குறை உள்ள போது தேவ ஞானத்தைக் கேட்க


6. தேவனுடைய வழிநடத்துதலை பெற்றுக்கொள்ள


7. இருக்கிற பலத்தோடு புறப்பட்டு போக


8. கர்த்தரை நம்பி விதை விதைக்க


9. தேவ ஒத்தாசையோடு இந்த ஊழியத்தை செய்ய


10. என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பலன் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள

Comments


hop church logo.jpg
bottom of page