top of page

அறுப்புக்கு வேலையாட்களை தேவன் அனுப்பும்படி ஜெபிப்போம்



அறுப்புக்கு வேலையாட்களை தேவன் அனுப்பும்படி ஜெபிப்போம்


அறுவடை மிகுதியாக இருக்கிறது. நம்மை சுற்றி அநேகர் இயேசுவை அறியாமல் இருக்கிறார்கள். யார் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்ல முடியும்? அது நம் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது. சுவிசேஷம் சொல்லுவது நமக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு.


அழிந்து போகிற ஆத்துமாக்கள் சந்திக்கப்படும்படி தேவன் ஆட்களை எழுப்பும்படி நாம் ஜெபிக்க வேண்டும். இந்த தேசம் சந்திக்கப்பட தேவன் அறுப்புக்கு வேலையாட்களை எழுப்ப வேண்டுமே!


அறுப்புக்கு எஜமானாகிய தேவனை நோக்கி கைகளை ஏறெடுப்போம்.


மத்தேயு 9:37 -38


தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்


 

மனப்பாட வசனம்


யோவான் 14:14

என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.


 

ஜெபக்குறிப்புகள்


1. இந்திய தேசத்தின் இரட்சிப்புக்காக


2. சந்திக்கபடாத மக்கள் இனங்களுக்காக


3. அழிந்து போகும் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு


4. இந்தியாவின் எல்லை எங்கிலும் சுவிசேஷ பாரம் உள்ளவர்களைத் தேவன் எழுப்ப


5. ஊழியம் செய்கிற அநேகர் எழும்ப


6. விசுவாசிகள் யாவரும் சுவிசேஷ பாரம் உள்ளவர்களாய் மாற


7. விசுவாசிகள் யாவரும் ஆத்தும ஆதாயம் செய்ய


8. சுவிசேஷ பாரம் விசுவாசிகளை நிரப்ப


9. நல்ல அறுவடையை தேவன் தரும்படி


10. அநேக ஆத்துமாக்கள் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ள



Comments


hop church logo.jpg
bottom of page