top of page
Writer's pictureHOP Church

சரியான நேரத்தில் விதைக்கும் ஞானத்தையே நாம் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்



சரியான நேரத்தில் விதைக்கும் ஞானத்தையே நாம் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்



நல்ல நிலமாகிய மனுஷனுடைய இதயத்தில் சுவிசேஷமாகிய விதையை விதைப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் பார்த்து வருகிறோம். சரியான நேரத்தில் விதை விதைப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நம் ஜெபிக்கின்ற நபருடைய இருதயத்தில் தேவனாகிய கர்த்தர் கிரியை செய்வது மிகவும் அவசியமாக இருக்கிறது.


நாம் அந்த ஆத்மாவுக்கு தொடர்ந்து ஜெபிக்கும் போது எந்த நேரத்தில் விதையை விதைக்க வேண்டும் என்கிற ஞானத்தையும் வழிநடத்துதலையும் தருவதற்கு தேவன் உண்மையுள்ளவர் ஆக இருக்கிறார். அதற்காக நாம் தேவனுடைய வார்த்தைக்காக காத்திருக்கிற அனுபவம் நம்முடைய வாழ்க்கையிலே அவசியம்.


அப்போஸ்தலர் 8:26-27


பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான்


அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து


 

மனப்பாட வசனம்


மாற்கு 16:16


விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்


 

ஜெபக்குறிப்புகள்


1. ஆத்தும ஆதாய ஊழித்திலே கர்த்தருடைய வழி நடத்துதலுக்காக


2. தேவனுடைய சத்தத்திற்கு உணர்வு உள்ளவர்களாய் நாம் இருக்கும்படி


3. கர்த்தரிடத்தில் ஏற்ற நேரத்தில் விதைக்கும் ஞானத்தைப் பெற்றுக் கொள்ள


4. தேவன் நம்மோடு கூட இருந்து இந்த ஊழியத்தில் நம்மை வழிநடத்த


5. திறந்த வாசல்களுக்காக


6. மனக் கண்கள் திறக்கப்பட


7. கல்லான இருதயங்கள் உடைக்கப்பட


8. அந்த ஆத்துமாவின் சூழ்நிலைகளை இரட்சிப்புக்கு ஏதுவாய் கர்த்தர் மாற்றும்படி


9. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக


10. பரலோகத்தில் மிகுந்த சந்தோஷத்தை நாம் கொண்டு வரும்படி



23 views

Comments


hop church logo.jpg
bottom of page