ஆத்தும பாரத்தோடு நாம் விண்ணப்பம் பண்ண ஜெபிப்போம்
ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும் என்கிற வாஞ்சையை நம்மில் அநேகருக்கு உண்டு. நம்மால் முடிந்தவரை இயேசுவைப்பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நாம் அறிந்திருக்க வேண்டிய ஒரு காரியம் நம்முடைய முயற்சிகள் மட்டும் போதாது. தேவனுடைய ஒத்தாசை இந்த ஊழியத்தில் மிகவும் தேவையாக இருக்கிறது.
அதைத்தான் கடந்த நாட்களில் ஜெபத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் நாம் பார்த்தோம். இந்த ஆத்துமாக்களுக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்காக அவர்கள் மனம் திரும்ப வேண்டும் என்ற உண்மையான பாரத்துடன் அவர்களுக்காக நாம் முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆத்தும பாரம் இருக்கும் என்றால் அவர்கள் ரட்சிக்கப்படும் வரை நாம் தொடர்ந்து ஜெபிப்போம் ஊழியம் செய்வோம்.
ரோமர் 10:1
சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.
மனப்பாட வசனம்
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
1 பேதுரு 2:9
ஜெபக்குறிப்புகள்
1. இந்த ஊழியத்தில் நாம் உற்சாகமடையும் படி
2. இடைவிடாமல் இந்த ஊழியத்தை நாம் செய்யும்படி
3. தேவனுடைய இருதயத் துடிப்பை நாம் நிறைவேற்ற
4. பயப்படாமல் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள
5. அழிந்து போகின்ற ஆத்துமாக்களை பற்றிய எண்ணம் இருக்க
6. இயேசுவுக்காய் வாழ வேண்டும் என்ற வைராக்கியம் உண்டாக
7. ஆத்துமாக்களுக்காக அனுதினம் ஜெபிக்க
8. ஆத்துமாக்கள் மீது கரிசனையோடு இருக்க
9. ஜெபத்திலே ஒருநாளும் சோர்ந்து போகாமல் இருக்க
10. திறப்பின் வாயிலே நிற்க
11. தேவனுக்கும் அவர்களுக்கும் மத்தியில் மத்தியஸ்தர்கள் ஆக இருக்க
Comments