சுவிசேஷ ஊழியம் தேவனுடைய இதயத்துடிப்பு
- HOP Church
- Nov 17, 2020
- 1 min read

சுவிசேஷ ஊழியம் தேவனுடைய இதயத்துடிப்பு
யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்
தேவனுடைய எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் அழிந்து போகின்ற ஆத்துமாக்களை பற்றி தான். ஒரு மனிதனுடைய இதயத் துடிப்பு அவனுடைய சிந்தனை எதைப்பற்றி இருக்கிறது என்பதை சொல்லும். தேவனுடைய இதயத்துடிப்புகள் பின்பாக ஒரு செய்தி உண்டு. அது என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒருவரும் கெட்டுப் போகக் கூடாது என்பதே அது.
அந்த இதயத் துடிப்பை உணர்ந்தவர்களாய் ஆத்தும ஆதாயம் செய்ய நீங்கள் ஆயத்தமா? தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றும் ஆத்தும ஆதாயம் செய்வோம்.
மனப்பாட வசனம்
யோவான் 1:12.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
ஜெபக்குறிப்புகள்
சுவிசேஷம் தேவனுடைய இருதயத் துடிப்பு
1. ஒருவரும் கெட்டுப் போகக் கூடாது என்ற தேவனுடைய எண்ணம் நம்முடைய எண்ணமாக மாற
2. அழிந்து போகிற ஜனங்களை குறித்த பாரம் உண்டாக
3. ஆத்தும பாரம் நம்மை விட்டு நீங்காமல் இருக்க
4. பாவத்தில் வாழும் ஜனங்கள் மீது மனதுருக்கம் உண்டாக
5. நித்திய ஜீவனை அநேகர் பெற்றுக்கொள்ள வாஞ்சை நமக்கு உண்டாக
6. பாவத்தின் ஆதிக்கத்தில் இருக்கிற ஜனங்கள் விடுதலையாக
7. தேவனை விட்டு தூரம் செல்லும் மனிதர்களை தேவ அன்பு சந்திக்க
8. நம்முடைய நண்பர்கள் தேவனை நேசிக்கும் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள
9. தேவன் மீது அவர்களுக்கு விசுவாசம் உண்டாக
10. இயேசுவை அறியாத நண்பர்கள் அவருடைய பிள்ளைகளாய் மாறும்படி

Comments