பாவத்தில் மரித்தவர்கள் உயிர்பிக்கப்பட ஜெபிப்போம்
- HOP Church
- Dec 14, 2020
- 1 min read

பாவத்தில் மரித்தவர்கள் உயிர்பிக்கப்பட ஜெபிப்போம்
ஆத்தும ஆதாய ஊழியம் செய்யும் பொழுது நாம் எந்த நபருக்காக ஜெபம் செய்கிறோமோ அந்த நபர் உயிர்பிக்க படும்படி ஜெபிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் பாவத்திற்கு அடிமையாக இருக்கிற காரியத்தில் இருந்து விடுதலை ஆகும் படி நாம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
அவர்கள் பாவ கட்டிலிருந்து விடுபடும் அளவும் சுவிசேஷத்தின் விதையானது அவர்கள் இருதயத்தில் வேற்கொள்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். எனவே அவர்கள் பாவங்களிலிருந்தும் அக்கிரமங்கள் கட்டுகளில் இருந்து விடுதலை ஆகும் படி நாம் அவர்களுக்காக உருக்கமாக ஜெபம் பண்ண வேண்டும்.
எபேசியர் 2:1
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்
மனப்பாட வசனம்
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
அப்போஸ்தலர் 2:38
ஜெபக்குறிப்புகள்
1. அவர்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ள
2. எல்லா அடிமைத்தனத்தின் ஆவிகளில் இருந்து விடுதலை பெற
3. குமாரன் தரும் விடுதலையை சுதந்தரித்துக் கொள்ள
4. பாவத்தை மேற்கொள்ள கிருபை பெற்றுக் கொள்ள
5. இயேசுவின் அன்பு அவர்களை சந்திக்க
6. கல்லான இருதயங்கள் உடைக்கப்பட
7. ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட
8. செவிகள் சுவிசேஷத்தை கவனிக்கிறவைகளாக இருக்க
9. உண்மையான மனந்திரும்புதல் உண்டாக
10. மனமாற்றத்தை தேவன் உள்ளத்தில் தர

Comments