top of page

சிலுவையின் உபதேசம் அவர்களை சென்றடைய



சிலுவையின் உபதேசம் அவர்களை சென்றடைய



சிலுவை பற்றின உபதேசம் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும். அதுதான் இரட்சிப்புக்கு ஏதுவாக அந்த நபரை வழிநடத்தும். இயேசு கிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்பதை அந்த நபர் விசுவாசிக்க வேண்டும். சிலுவையின் உபதேசம் மட்டுமே ஒரு ஆத்துமாவை சரியான இரட்சிப்பு நேராக வழிநடத்தும்.


நாம் சுவிசேஷ விதை விதைக்கும் போது இயேசு சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதை அவர்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டும். நம்முடைய பாவங்களை தன்மீது ஏற்றுக்கொண்டார் என்பதை சொல்லவேண்டும். இந்த சிலுவையின் உபதேசம் தேவ பலனாய் நிச்சயமாக மாறும்.


1 கொரிந்தியர் 1:18


சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது

 

மனப்பாட வசனம்


பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.


யோவான் 6:37


 

ஜெபக்குறிப்புகள்


1. அவர்கள் இருதயத்தில் விசுவாசம் உண்டாக


2. அவர்கள் வாயினால் அவர்கள் விசுவாசத்தை அறிக்கை செய்ய


3. கல்லான இருதயங்கள் மாற


4. மனக் கண்கள் திறக்கப்பட


5. செவிகள் கவனிக்கிற செவிகள் ஆக மாற


6. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக


7. உண்மையான மனந்திரும்புதல் உண்டாக


8. பாவத்தின் கட்டுகளில் இருந்து விடுதலை ஆக


9. அக்கிரம சிந்தைகளிலிருந்து விடுதலை ஆக


10. பூரண ரட்சிப்பு உண்டாக



Comments


hop church logo.jpg
bottom of page