சுவிசேஷ ஊழியம் தேவனுடன் உடன் வேலை ஆளாக இருக்க வாய்ப்பு
லூக்கா 10:2
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக் கொள்ளுங்கள்
சுவிசேஷ ஊழியம் செய்யும்போது நாம் எஜமானாகிய தேவனுடன் இணைந்து வேலை செய்யும் ஒரு அருமையான வாய்ப்பை பெற்றுக் கொள்கிறோம்.
நம் தனிமையாக இந்த ஊழியத்தை செய்வதில்லை. ஆம் தேவனாகிய கர்த்தர் இந்த பணியில் நம்முடைய எஜமானாக இருக்கிறார்.
நடுவதும் நீர் பாய்ச்சுவதும் நம்முடைய வேலையாக இருக்கிறது. விளைச்சலைத் தருகிறவர் தேவனாகிய கர்த்தர். ஆம் தேவனுடன் இணைந்து அவருடைய தோட்டத்தில் வேலை செய்வது எவ்வளவு பெரிய சிலாக்கியம். ஆத்தும ஆதாயம் செய்வோம் அவர் பணி செய்திடுவோம்.
மனப்பாட வசனம்
யோவான் 3:5
இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
ஜெபக்குறிப்புகள்
சுவிசேஷ ஊழியம் தேவனோடு உடன் ஊழியம் செய்ய ஒரு வாய்ப்பு
1. தேவனோடு இணைந்து ஊழியம் செய்ய ஒரு வாய்ப்பாக இருப்பதால் ஆத்தும ஆதாயம் செய்ய
2. தேவனுடைய நம்மீது வைத்துள்ள நம்பிக்கையை காத்துக் கொள்ள
3. நாம் தனியாக அல்ல தேவனும் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள
4. சுவிசேஷ ஊழியத்தில் தேவனுடைய ஒத்தாசை இருக்க
5. ஜெபத்துடன் சுவிசேஷ விதை விதைக்க
6. தேவன் நம்மை வழி நடத்துவதை உணர்ந்து கொள்ள
7. விதைக்கும் இடத்தில் ஆவியானவர் கிரியை செய்ய
8. தேவன் தம்முடைய ஞானத்தினால் நம்மை நிரப்ப
9. தேவன் சமயத்திற்கு ஏற்ற ஞானத்தை நமக்கு தரும்படி
10. தேவனோடு இணைந்து வாழ்நாள் முழுவதும் சுவிசேஷ ஊழியம் செய்ய
Comentários