சுவிசேஷ ஊழியம் தேவனுடைய திட்டம்
- HOP Church
- Nov 20, 2020
- 1 min read

சுவிசேஷ ஊழியம் தேவனுடைய திட்டம்
1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
தேவன் ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார். மந்தையில் இல்லாத ஆடுகளைத் தம்முடைய மந்தையில் சேர்ப்பதற்கு தேவன் திட்டத்தை வைத்திருக்கிறார். அதில் முக்கிய பங்கு நமக்கு உண்டு. ஆம் வேதம் நம்மை தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி என்று சொல்லுகிறது.
தேவனுடைய திட்டத்தில் நம்முடைய பங்கு என்ன என்பதை நாம் உணர்ந்து கொள்வோம் என்றால் அறுவடை மிகுதியாக இருக்கும். ஒருவர் தவறினாலும் தேவனுடைய திட்டம் நிறைவேற அநேக நாட்கள் செல்லும்
தாமதிக்காமல் ஆத்தும ஆதாயம் செய்வோம்
மனப்பாட வசனம்
யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
ஜெபக்குறிப்புகள்
சுவிசேஷ ஊழியம் தேவனுடைய திட்டம்
1. அவர் துதியைச் சொல்ல நம்மை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள
2. நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை நாம் மறந்து போகாமல் இருக்க
3. தேவனுடைய திட்டத்திற்கு ஒப்புக்கொடுக்க
4. தேவன் விரும்புகிற காரியத்தைச் உணர்ந்து கொள்ள
5. தேவ சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுக்க
6. நாம் இருக்கின்ற இடத்தில் தேவனைப் பற்றி சொல்ல
7. இந்தக் காலத்தில் மௌனமாய் இல்லாமல் இருக்க
8. நான் செய்ய வேண்டிய கடமையைத் தவறாமல் செய்ய
9. நாம் என்ன செய்யவேண்டும் என்று தேவன் நினைக்கிறாரோ அதை அறிந்து செயல்பட
10. நம்மால் தேவனுடைய திட்டம் செயல்படுவது தடையாகாமல் இருக்க

Kommentarer