top of page
Writer's pictureHOP Church

சுவிசேஷ ஊழியம் அன்பினால் உந்தப் பட வேண்டும்



சுவிசேஷ ஊழியம் அன்பினால் உந்தப் பட வேண்டும்


1 கொரிந்தியர் 5:14


கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்


நாம் செய்யும் சுவிசேஷ ஊழியம் வெறும் கடமை உணர்வினால் செய்வோமானால் அதில் எந்த பலனும் இல்லை. அன்புடன் இந்த ஊழியத்தை நாம் செய்யும் போது ஆத்துமாக்களை நம்மால் ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும். ஆம் உறவின் அடிப்படையில் நாம் இந்த ஊழியத்தை செய்யும்போது அழிந்து போகிற ஒவ்வொரு ஆத்மாவையும் நம்மால் ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும்.


நாம் தேவனை நேசிப்போம் என்றால் நம்மால் அவருடைய அன்பை பற்றி பேசாமல் இருக்க முடியாது. அவருடைய அன்பு நம்முடைய வாழ்வில் இருக்கும் என்றால் நம்மால் அதை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. தேவனை நேசிப்போம். அவர் அன்பை நினைவு கூறுவோம். அவர் அன்பை பகிர்ந்து கொள்ளவோம். ஆத்தும ஆதாய ஊழியத்தை அன்புடன் செய்வோம்.



 

மனப்பாட வசனம்


யோவான் 8:32

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.


 

ஜெபக்குறிப்புகள்


சுவிசேஷ ஊழியம் தேவ அன்பினால் உந்தப்படுகிறது


1. தேவ அன்பு நம்மை தினமும் நெருக்க


2. தேவன் நம் மீது வைத்துள்ள அன்பை மறவாமல் இருக்க


3. தேவனை முழுமனதோடு கூட நேசிக்க


4. தேவ சத்தத்திற்கு செவிகொடுக்க நேரம் எடுக்க


5. தேவன் என்ன சொல்லுகிறார் என்பதை கவனித்து காத்திருக்க


6. தேவன் மீது உள்ள அன்பு ஒவ்வொரு நாளும் வளர


7. தேவனை நேசித்து அவர் விருப்பத்தை செய்ய நாட


8. தேவன் நம்மை மன்னித்ததை ஒருபோதும் மறவாமல் இருக்க


9. தேவனுக்கு ஏதாவது செய்யும்படி தினமும் ஆசைப்பட


10. அன்பினாலே இந்த ஊழியத்தை செய்ய




43 views

Comments


hop church logo.jpg
bottom of page