துன்பம் என்பது கிறிஸ்துவோடு உள்ள பயணத்தில் ஒரு பங்காகும்...
பரிசுத்த வாழ்வை வாழ வேண்டும் என்றால் அவர்கள் துன்பப்படுவார்கள்...
ஆனால் அந்தத் துன்பம் நிரந்தரமல்ல அதைப் பின் தொடர்ந்து வருகிற நித்திய சந்தோஷமே நிரந்தரம்...
துன்பத்தின் மத்தியில் தேவன் உன்னை மறந்து விட்டாரோ என்று அவரிடம் கேள்வி கேட்காதே...
துன்பத்தின் மத்தியில் உன் நம்பிக்கையை இழந்து சோர்ந்து போகாதே...
துன்பத்தின் மத்தியில் முழங்காலில் நின்று அவருடைய சித்தத்தை செய்...
இதைத் தான் இயேசுவும் செய்தார் - விசுவாசத்தில் நிலைத்திரு...
பிலிப்பியர் 1:29
ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
வேதனை என்பது விசுவாச வாழ்வின் ஒரு பகுதி! "ஏன் ஆண்டவரே"? என்று கேட்பதை நிறுத்தி விட்டு "இதோ அடியேன் இருக்கிறேன்" என்று சொல்!! அவருடைய நாமத்தின் நிமித்தம் நாம் துன்பப்படுவது நமக்கு வழங்கப்பட்டது - சகித்துக்கொள்ளுங்கள்!!!
Commentaires