நீ கொடுப்பதில் தேவன் விகிதத்தை பார்க்கிறார்....
மனித மூளை அளவை கணக்கிடும்.....
தேவன் தரத்தை பார்க்கிறார்....
நேரமோ, பணமோ அல்லது பெலனோ எதை கொடுக்கின்றாய் என்று பார்....
நீ தேவனுக்கு ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ தர முடியும்....
உன் மனப்பான்மை சரியாக இருந்தால் நீ கொடுப்பது தேவன் உள்ளத்தை தொடும்....
நீ செய்யும் செயலுக்காக மனிதரின் பாராட்டை எதிர்பாராதே....
உன் அசைவுகளை பதிவு செய்யும் தேவன் இருக்கிறார்....
உன் கைகளில் உள்ளதை வாங்கும் முன் உன் இருதயத்தை அவர் பார்க்கிறார்....
மீதம் உள்ளதை அல்லது சரியானதை அவருக்கு கொடுப்பது உன் தெரிவு!
மாற்கு 12:44
அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்
நீ தேவனை நேசித்தால் உன் முழுமையையும் அவருக்கு கொடு! மீதம் உள்ளதை அல்ல சரியானதை அவருக்கு கொடு!! தேவன் அளவை பார்ப்பதில்லை தரத்தையே பார்க்கிறார்!!!
Comments