இது இன்றைக்கும் சத்துரு பயன்படுத்தும் யுக்திகளில் ஒன்றாக இருக்கிறது....
தேவனுக்கு என்று உன் அர்ப்பணிப்பு சிறிதாக இருக்கும் வரை அவனும் அதிகம் உன்னை தொந்தரவு செய்ய மாட்டான்....
ஆனால் உன்னை தேவனோடு கூட ஆழமான உறவுக்குள் செல்ல விடமாட்டான்....
அதனால்தான் தேவனுடைய பிள்ளைகள் ஆவிக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதோடு திருப்தி ஆகிவிடுகிறார்கள்....
நீ தேவனோடு ஆழமான உறவுக்குள் செல்லாத வரை கடமைகள் சடங்கு ஆச்சரியமாகவே இருக்கும்....
சத்துரு வழியில் கொண்டு வரும் எல்லா தடைகளையும் மேற்கொள்ள உனக்கு விருப்பம் உண்டா?
நீ ஆராதிக்க அழைக்கப்பட்டாய் உன் முழு இருதயத்தோடும் அதை செய்!
ஒவ்வொரு நாளும் தேவனிடம் நெருங்கி செல்....
யாத்திராகமம் 8:28
அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்
ஒவ்வொரு நாளும் தேவனை கிட்டி சேர ஆசைப்படு! தேவனை கிட்டி சேருவதைத் தடுப்பது எதுவாக இருந்தாலும் அது உன் வாழ்க்கை விட்டுப் போகட்டும்!! வெளிப்பிரகாரத்தோடு நின்று விடாதே - ஒவ்வொரு நாளும் ஆராதனையில் அவருடைய பிரசன்னத்தை உணருமட்டும் முன்னேறிச் செல்!!!
Comentários