இயேசு சிலுவையில் இருந்தபோது அவரை கேலி செய்தார்கள் ...
உயிர்தெழுதல் வரப்போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் இயேசு அறிந்திருந்தார்....
தொல்லைகள் உன்னை நெருக்கும்போது கவலைப்படாதே ....
உன்னை சுற்றியுள்ள மக்களின் கொடூரமான வார்த்தைகளால் சோர்வடையாதே ...
நீ பந்தயத்தின் கடைசி ஒட்டத்தை ஓடும்போது தோற்கடிக்கப்பட்ட உணர்வில் இருக்காதே ...
அது முடிவல்ல உனக்கு முன்னால் ஒரு மகிமையான முடிவு காத்திருக்கிறது ...
கடந்து செல்லும் அச்சுருத்தும் மேகத்தால் ஏமாந்து போகாதே ...
மாற்கு 15: 29,30
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலையைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்! ”
தேவனை துதித்துக் கொண்டே இரு! உன் குரலை உயர்த்தி ஆராதனை செய்!! நீ சிலுவையோடு நிற்கப் போவதில்லை !! களிகூரு- உயிர்த்தெழுதலின் நாள் வருகிறது !!!
Comments