கர்த்தருக்கு ஊழியம் செய்யும் பொழுது உன்னுடைய இருதயத்தையும் கரங்களையும் முழுமையாய் பயன்படுத்து...
நேர்மையின் இதயத்துடன் கடவுளை சேவி...
தேவன் உன் செயலைவிட செயலின் நோக்கத்தையே பார்க்கிறார்...
உன்னுடைய திறமையின் செயலை விட உன் ஆர்வத்தையே தேவன் கவனிக்கிறார்...
சரியான மனப்பான்மையுடன் அவரை சேவி...
பரத்திலிருந்து கொடுக்கப்படும் வேலையை உண்மையாய் செய்...
உன் திறமைகளை தேவனை மகிமைப்படுத்த பயன்படுத்து...
விடாமுயற்சியுடன் தேவராஜ்ஜியத்தை கட்டு...
சங்கீதம் 78:72
இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.
தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருப்பதற்கு தாவீது இதைத்தான் செய்தார்! உன் முழு பலத்தோடும் உன் முழு இருதயத்தோடும் அவரை சேவி!! உனது உண்மையை மனப்பான்மையின் மூலமாகவும் செயலின் மூலமாகவும் வெளிப்படுத்து!!!
Comments