சோதனைகள் நம் வாழ்வில் ஒரு பகுதியாகும்....
பிசாசு தொடர்ந்து சோதித்துக் கொண்டே இருப்பான்....
அவன் தாக்குதலை மேற்கொள்ள ஆயத்தமா?
அவன் எய்யும் அம்புகளை சந்திப்பதற்கு நீ ஆயத்தமா?
மாம்ச இச்சைகளில் மேற்கொள்ள நீ உபவாசித்து ஜெபிக்கின்றாயா?
நீ திரும்பிப் பார்ப்பாய் என்றால் தவறவிட்ட தருணங்கள் அநேகம் உண்டு....
நீ திரும்ப திரும்ப விழுந்து போனது உண்மைதான்....
இது எல்லாவற்றையும் சரி செய்து அவர் கிருபையை சார்ந்து மேற்கொள்ள வேண்டிய நேரம்....
வருஷம் முடிவுக்கு வரும் நேரத்தில் தேவ வார்த்தையில் மூழ்கிடு...
வருஷம் முடிவுக்கு வரும் நேரத்தில் தேவ சத்தத்தை தெளிவாகக் கேட்கும்படி உபவாசித்து ஜெபி....
லூக்கா 4:13
பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்
சோதனைகள் ஓய்ந்து போவதில்லை! ஆனால் உன்னை மேற்கொள்ளுகின்ற நபராய் மாற்ற தேவ கிருபை போதுமானது!! தேவ வார்த்தை தருகிற பலத்தை சார்ந்துகொள் - உன்னை பெலவானாய் மாற்றும்படி உபவாசித்து ஜெபம் பண்ணு!!!
Comments