தேவனே நமது சகாயர்!
தனிமையாய் விரக்தியோடு இருக்கும் ஆத்துமாவுக்கு அவரே சகாயர்....
உடைக்கப்பட்டு மன அழுத்தத்தில் இருக்கும் ஆத்துமாக்கு அவரே சகாயர்....
கவனிக்கப்படாத கவனம் செலுத்தப் படாதவர்களுக்கு அவரே சகாயர்....
புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்டவர்களுக்கு அவரே சகாயர்....
திக்கற்ற நம்பிக்கை அற்றவர்களுக்கு அவரே சகாயர்....
சத்துருவால் உனக்கு விரோதமாக கிரியை செய்ய முடியாது...
தேவன் உன் பட்சத்திலிருந்து அவனைத் தடுமாறச் செய்வார்....
அவரை நோக்கிக் கூப்பிட்டு விடுதலையை பெற்றுக் கொள்!
சங்கீதம் 54 : 4
இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்.
தேவனே உனக்கு சகாயர்! நீ தனிமையாக இல்லை - பராக்கிரமசாலி உன் பக்கம் இருக்கிறார்!! அவரை நோக்கிக் கூப்பிட்டு விடுதலை பெற்றுக்கொள்!!!
Comments