நம்பிக்கையுடன் பற்றிக் கொண்டு இரு!
ஆம்! இது ஒரு கடந்து செல்லும் மேகம்....
இப்பொழுது உள்ள பாடுகள் இனி வரப்போகிறதற்கு முன்பாக ஒன்றுமே இல்லை.....
உன்னுடைய வேதனையான பாதை மகிழ்ச்சியான முடிவோடு நிறைவடைய போகிறது....
இப்பொழுது உள்ள சூழ்நிலையை பார்ப்பதை நீ நிறுத்தும்போது.....
இன்றைய சூழ்நிலையை கடந்து நீ பார்க்கும் பொழுது மகிழ்ச்சியோடு உன்னால் இந்த பள்ளத்தாக்கை கடந்து செல்ல முடியும்.....
ரோமர் 8:18
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்
ஆம், இந்தப் பாதையின் முடிவில் ஒரு அழகான ஆசீர்வாதம் உனக்காக காத்திருக்கிறது! விசுவாசத்துடன் இந்த பள்ளத்தாக்கை கடந்து செல்!! உன் நம்பிக்கையை ஒருபோதும் வீண்போகாது!!!
Comments